பொய் மெய் காதல்
கண்ணீரில் நீந்தும் மீன்களாய், கருவிழி முழுதும் எதிர் பிம்பம் தேங்க,
கண்விழியோரம் கசிந்த நீரை துடைத்தெழுந்தாள் கயல்விழி, ஆம் கதையின் நாயகி தான். “ஆறுதல்
சொல்ல அன்னை இல்லையே” என்பவர்களுக்கெல்லாம், “தாயுமனவராய் என் தந்தை இருக்கிறார்”
என சிவமணி-யை சுட்டிக்காட்டி சொல்வாள், சற்று சூடாகவே. இதற்காகவே, பள்ளி முதல்
கல்லூரி வரை தனக்காக அனுதாபப்படும் அத்துணை தோழிகளையும் இழந்தால்.
“தெரியாமல் சொன்ன வார்த்தைக்கு தோழியை முறைத்து விட்டோமே” என எண்ணி, கைபேசியை
நாடிச்சென்று, பெயர் பட்டியலில் “Aruna” என பெயர் வர,
வேகமாய்
button-ஐ அழுத்தி காதில்
வைத்தால்.
கயல்விழி : “ஹலோ அருணா.?”
“அருண் இல்லங்க. வெளில போயிருக்கான், நீங்க?” (ஒரு ஆணின் குரல்)
கயல்விழி : அருண் இல்ல, அருணா என்னோட friend, அவ போன் இல்லையா இது?
“இல்ல இது என் போன் தான், அருணா-னு எனக்கு யாரையும் தெரியாது., நம்பர் ,மாத்தி
போற்றுபிங்க சரியா பாருங்க..”
கயல்விழி : “இல்லைங்க அவ நம்பர்-க்கு நான் நிறைய தடவ பேசிறிகேன், அவ CallerTune
கூட Mr.Romeo-ல மெல்லிசையே பாட்டு-ல ‘பூவில் நாவிருந்தால், காற்றும் வாய் திறந்தால்’-னு
வரும், ஆனா இன்னைக்கு ரிங் போகல, பாட்டும் கேக்கல, கால் பன்னொன நீங்க தான்
எடுத்திங்க, நம்பரும் கரெக்ட் தான் அதான் எனக்கு ஒன்னும் புரியல. சரி ஓகே
sorry-ங்க தெரியாம பண்ணிட்டேன்” என பட்டாசாய் வெடித்தாள்.
“என்னோட நம்பர் 95000XXXXX, ஒருவேள cross-talk-ஆ இருக்கலாம்., உங்க மேல
தப்பில்ல, ஆனா நீங்க சொன்ன பாட்டு Mr.Romeo இல்ல love Birds”.
கயல்விழி : “எல்லாம் எனக்கு தெரியும், வந்துட்டாங்க....” – னு phone-அ கோவமா
வச்சுட்டேன்.
சில நிமிடங்கள் கழித்து, சில மைல் தூரம் கடந்து. மறுமுனையை சற்று எட்டிப்பார்த்தால்.
1 New Message, Received (Unknown)
(காதல் வளரும்...)
முதல் பதிவு.. பிழைகளையும், பக்குவமின்மையையும் மன்னிக்கவும்..
ReplyDeleteNandru Nandru....
ReplyDeleteநன்றி.. @Karthik J Pandian
Deleteஸ்டோரி னல்ல இருக்கு டா, மீதி ஸ்டோரி எப்போ டா போஸ்ட் பன்னுவ??????? @ Rex
ReplyDeleteweekly once..@ Kicha
ReplyDelete