வெறுமை நிறைந்த வீட்டை சுற்றித்திரிந்த ஜீவனுக்கு இயற்பெயர் சஞ்சய் அல்ல ஜெயகார்த்திக். ஆம், என்றோ ஒரு நாள் மின்னஞ்சல் முகவரிக்கு, “Someone already has
that username. Try another?” என்ற warning message இடமிருந்து
தப்பிச்செல்லதான், சண்முகம் என்ற தன் அப்பா பெயரை இணைத்தான்.
இப்போது, முகம் தெரியா தோழியின் முதல் அபிப்ராயத்தை சம்பாதிப்பதற்காகத்தானோ என்னவோ., பெயர்
பொருத்தி, இல்லை திருத்தி சொல்லியிருக்கிறான்.
வெறுமை நிறைந்த வீடு..? ஆம்., சென்னைவாசிகளின்
வார இறுதி பல பரிமாணங்களாகத்தான் உருவெடுத்துள்ளது., நட்போடு மது,
நல்ல தூக்கம், பல்சுவை உணவு, வெளியூர் பயணம், அன்றாட வேலை, ஆடம்பர தேவை, கடலோரக் காற்று,
கங்காருவாய் காதலியை சுமந்துச்செல்லும் வாகன்கள் ECR ரோட்டில் எத்துனை
எத்துனையோ..!,
இப்படிதான் ஜெய் யின் சகாக்கள் இருவரும் சனி இரவை சாதுரியமாக கழிக்க
சென்றிருக்கிறார்கள்..
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றார் போல் வாழ்க்கை ஓட்டத்தை துரிதப்படுத்தி, மனிதம் மறந்த நாம் http://www.chennaivolunteers.org/, https://www.savethechildren.in/, https://www.worldvision.in/ போன்ற வலைத்தளங்களை கடந்து செல்லும் வாய்ப்புகள் குறைந்தாலும், மாதம் இருநாட்கள்
ஒதுக்கி அருண்., வினோத்., போன்று, இன்னும் பல சகாக்கள் ஆர்வ ஊழியர்களாக வாழ்வதும்
இதே சென்னையில் தான்..
Weekend volunteers
ah வெளில கெளம்புன ரெண்டு
சகாவுக்கும்., விடை சொல்லிட்டு,. சொச்ச மிச்ச
வேலைய முடிக்கும் வேளையில.. புதுசா ஒரு
குழப்பம், புதிர்ப்போட்டு நிக்கிது..!
வேலை, குடும்பம், நட்பு, சம்பளம், சமுதாயம், கேளிக்கை, ஓய்வு,
இதற்கிடையில் இப்படி ஒருவள் தேவையா.? என்ற கேள்வியை சுமந்துகொண்டே மடிகணினியை மடித்து வைத்து மௌனமாய்
மெத்தையில் அமர்ந்து, அனிச்சைச்செயலாய் செல்லிடப் பேசியை கையில் எடுத்தால், அடுத்தடுத்து ரெண்டு மணியோசை அவளிடம் இருந்து தான்..
மெத்தையில் அமர்ந்து, அனிச்சைச்செயலாய் செல்லிடப் பேசியை கையில் எடுத்தால், அடுத்தடுத்து ரெண்டு மணியோசை அவளிடம் இருந்து தான்..
சுளீரென்ற அவள் கோபம் சுட்டெரித்திருந்தாலும், அறையோடு அவனின் மன இருளையும்
போக்கியது அந்த இரு குறுஞ்செய்திகள்..
“Sorry”
“நான் கொஞ்சம் அப்படிதான் பேசுவேன் தப்பா எடுதுக்கதிங்க..”
சோகமாய் படுத்திருந்த தலையணை சுறுசுறுப்பாய் உக்கார்ந்தது.
-வளரும்
No comments:
Post a Comment