அக்னியை உள் சுமந்து., கடல் சூழ்ந்து காட்சித்தரும் பூமி அல்ல அவள். அனல் வேலி
போட்டுதனை காக்கும் மென்பதுமை அவள். எனைத்தேடி வந்தவளை., எந்நாளும் நான் மறவேன்., என
உரக்க சொன்னது உள்மனது.
“அப்பாடா இப்பதான் கொஞ்சம் பயம் போயிருக்கு, :P“-னு
டைப் செஞ்சு send பட்டன்-அ அழுத்துனதும், மொபைல் வெளிச்சம்
போனாலும் சஞ்சய்-யின் முகம்
வெளுச்சமாச்சு..
“வஞ்சம் வச்சு வெசமா
மாறுறதுக்கு, கசக்கும் போதே துப்புறது சரிதானே..?” –னு சொன்ன சாஜிதா-வோட
பதிலுக்கு.
“ஹ்ம்ம் சரிதான்.. ஆனா எப்ப
துப்புவ எதுக்கு துப்புவனு தெரியாமலே நான் பேசமுடியாதுல ” -னு சஞ்சய் அனுப்புன
msg-அ பாத்து பாத்து சிரித்தாள் கயல்.
வழக்கமாய் தூங்கும் நேரம்.. எப்போதோ
போனாலும்.. விடைசொல்ல மறுக்கும் இளசுகளின் இமைகள்..
“ஹ.. ஹ.. என்ன
தெரிருஞ்சுக்கணும்,., கேளு சொல்றேன்” -னு
அனுப்புனதுக்கு அப்பறம் தான் தெருஞ்சுச்சு, மரியாத மாறி
போச்சே-னு.,
பரவால்ல என்ன சொல்லிற போறான்..பாப்போம்னு சொல்லுது மனசு.
“இல்ல Shaji, உங்கள பத்தி சொல்லாட்டியும் உங்க character,
hobbies பத்தி தெருஞ்சுக்காலம்ல”
இல்ல Shaji-ஆ இத taking advantage -னு எடுத்துக்குறதா
இல்ல Behaving friendly -னு எடுத்துக்குறதா -னு விடாம
கேக்குது பொம்பள மனசு.
சின்னஞ்சிறு இடைவெளிக்கு பிறகு தானாய் ஒற்றை முடிவிற்கு
வந்தால்.
என்னோட friends என்ன கயல்-நு சொன்னா எனக்கு
கோபம் வராதே அப்படித்தானே சாஜிதா-வுக்கும்
“தெரிஞ்சுக்கலாம் Sanjay..”
-வளரும்
No comments:
Post a Comment