Wednesday, 3 December 2014

பொய் மெய் காதல் - பாகம்-4



அக்னியை உள் சுமந்து., கடல் சூழ்ந்து காட்சித்தரும் பூமி அல்ல அவள். அனல் வேலி போட்டுதனை காக்கும் மென்பதுமை அவள். எனைத்தேடி வந்தவளை., எந்நாளும் நான் மறவேன்., என உரக்க சொன்னது உள்மனது.

அப்பாடா இப்பதான் கொஞ்சம் பயம் போயிருக்கு, :P“-னு
டைப் செஞ்சு send பட்டன்-அ அழுத்துனதும், மொபைல் வெளிச்சம் போனாலும் சஞ்சய்-யின் முகம் வெளுச்சமாச்சு..

வஞ்சம் வச்சு வெசமா மாறுறதுக்கு, கசக்கும் போதே துப்புறது சரிதானே..?” –னு  சொன்ன சாஜிதா-வோட பதிலுக்கு.

ஹ்ம்ம் சரிதான்.. ஆனா எப்ப துப்புவ எதுக்கு துப்புவனு தெரியாமலே நான் பேசமுடியாதுல-னு சஞ்சய் அனுப்புன msg-அ பாத்து பாத்து சிரித்தாள் கயல்.

வழக்கமாய் தூங்கும் நேரம்.. எப்போதோ போனாலும்.. விடைசொல்ல மறுக்கும் இளசுகளின் இமைகள்..

ஹ.. ஹ.. என்ன தெரிருஞ்சுக்கணும்,., கேளு சொல்றேன் -னு
அனுப்புனதுக்கு அப்பறம் தான் தெருஞ்சுச்சு, மரியாத மாறி போச்சே-னு.,
பரவால்ல என்ன சொல்லிற போறான்..பாப்போம்னு சொல்லுது மனசு.

இல்ல Shaji, உங்கள பத்தி சொல்லாட்டியும் உங்க character, hobbies பத்தி தெருஞ்சுக்காலம்ல”

இல்ல Shaji-ஆ இத taking advantage -னு எடுத்துக்குறதா இல்ல Behaving friendly -னு எடுத்துக்குறதா -னு விடாம கேக்குது பொம்பள மனசு.

சின்னஞ்சிறு இடைவெளிக்கு பிறகு தானாய் ஒற்றை முடிவிற்கு வந்தால்.

என்னோட friends என்ன கயல்-நு சொன்னா எனக்கு கோபம் வராதே அப்படித்தானே சாஜிதா-வுக்கும்

“தெரிஞ்சுக்கலாம் Sanjay..”
                                                     -வளரும்

-

                                               

Thursday, 20 November 2014

பொய் மெய் காதல் - பாகம்-3


வெறுமை நிறைந்த வீட்டை சுற்றித்திரிந்த ஜீவனுக்கு இயற்பெயர் சஞ்சய் அல்ல ஜெயகார்த்திக். ஆம், என்றோ ஒரு நாள் மின்னஞ்சல் முகவரிக்கு, “Someone already has that username. Try another?”  என்ற warning message இடமிருந்து தப்பிச்செல்லதான், சண்முகம் என்ற தன் அப்பா பெயரை இணைத்தான்.

இப்போது, முகம் தெரியா தோழியின் முதல் அபிப்ராயத்தை சம்பாதிப்பதற்காகத்தானோ என்னவோ., பெயர் பொருத்தி, இல்லை திருத்தி சொல்லியிருக்கிறான்.

வெறுமை நிறைந்த வீடு..? ஆம்., சென்னைவாசிகளின் வார இறுதி பல பரிமாணங்களாகத்தான் உருவெடுத்துள்ளது., நட்போடு மது, நல்ல தூக்கம், பல்சுவை உணவு, வெளியூர் பயணம், அன்றாட வேலை, ஆடம்பர தேவை, கடலோரக் காற்று, கங்காருவாய் காதலியை சுமந்துச்செல்லும் வாகன்கள் ECR ரோட்டில் எத்துனை எத்துனையோ..!,

இப்படிதான் ஜெய் யின் சகாக்கள் இருவரும் சனி இரவை சாதுரியமாக கழிக்க சென்றிருக்கிறார்கள்..

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றார் போல் வாழ்க்கை ஓட்டத்தை துரிதப்படுத்தி,  மனிதம் மறந்த நாம் http://www.chennaivolunteers.org/, https://www.savethechildren.in/, https://www.worldvision.in/ போன்ற வலைத்தளங்களை கடந்து செல்லும்  வாய்ப்புகள் குறைந்தாலும், மாதம் இருநாட்கள் ஒதுக்கி அருண்., வினோத்., போன்று, இன்னும் பல சகாக்கள் ஆர்வ ஊழியர்களாக  வாழ்வதும் இதே சென்னையில் தான்..

Weekend volunteers ah வெளில கெளம்புன ரெண்டு சகாவுக்கும்., விடை சொல்லிட்டு,. சொச்ச மிச்ச வேலைய முடிக்கும் வேளையில.. புதுசா ஒரு குழப்பம், புதிர்ப்போட்டு நிக்கிது..!

வேலை, குடும்பம், நட்பு, சம்பளம், சமுதாயம், கேளிக்கை, ஓய்வு, இதற்கிடையில் இப்படி ஒருவள் தேவையா.? என்ற கேள்வியை சுமந்துகொண்டே மடிகணினியை மடித்து வைத்து மௌனமாய்
மெத்தையில் அமர்ந்து, அனிச்சைச்செயலாய் செல்லிடப் பேசியை கையில் எடுத்தால், அடுத்தடுத்து ரெண்டு மணியோசை அவளிடம் இருந்து தான்..
சுளீரென்ற அவள் கோபம் சுட்டெரித்திருந்தாலும், அறையோடு அவனின் மன இருளையும் போக்கியது அந்த இரு குறுஞ்செய்திகள்..
“Sorry”
“நான் கொஞ்சம் அப்படிதான் பேசுவேன் தப்பா எடுதுக்கதிங்க..”
சோகமாய் படுத்திருந்த தலையணை சுறுசுறுப்பாய் உக்கார்ந்தது.


                                                                                                                        -வளரும்

Thursday, 6 November 2014

பொய் மெய் காதல் - பாகம்-2

1 New Message, Received (Unknown) 

“Sorry, அது LoveBirds, தான்”

“ஹ ஹ . :D”

“எதுக்கு நக்கல் சிரிப்பு..? ஆணவமா?”

“இல்ல நம்மக்கு புடுச்ச வைரமுத்து தப்பு பண்ணிடாரே –னு சின்ன சிரிப்பு”

“உங்களுக்கும் வைரமுத்து பிடிக்குமா..? ஆமா என்ன தப்பு?”

“ஹ்ம்ம்., ரொம்ப...பிடிக்கும்,.. இல்ல., ‘ஒவ்வொரு வாதமும்., முடியும் போது உன்னிடம் தோற்ப்பேன்-னு சொல்லிருக்காரு, நான் தோக்கலைல, அதான் சிரிப்பு வந்துருச்சு..”

ஆணவம் கூடாது ஆண்மகனே.., அதே வைரமுத்து தான் கவிதைக்கு பொய் அழகு-னு சொன்னதும்.. வெகுளிக்கோவத்துடன் விளையாட்டான அவள் பேச்சை., பொறுமையாய் காட்டிக்கொண்டிருந்தது, மெத்தைக்கு நேரெதிரில் இருந்த அலங்காரக்கண்ணாடி..

“ஓ..!.வாதம் முடியுமிடம்.. இதுதானோ..,?.. நீங்களும் பயங்கரமா பேசுறிங்க, உங்க பேரு என்ன.. யாழினி, இலக்கியகனி அந்த மாறி தமிழ் பெயரா??

தமிழ் பேரு வச்சா தான், மொழி பிடிக்கனுமா.. என் பேரு Shajitha Banu,. உங்க பேரு

“Sanjay..நான், சென்னை..நீங்க எந்த ஊரு.?”

“I don’t like to give my personal details to you and I mean it, if you don’t get this, you won’t get my messages too.

“Ok” என்ற குறுஞ்செய்தியை அனுப்பிய வினாடியே, மெத்தையில் குட்டிக்கரணம் அடித்து குப்புற விழுந்தது.. Software engineer-இன் Samsung galaxy.

                       
                                                                                                  --- அடுத்த பாகம்  விரைவில் - - 


Thursday, 16 October 2014

பொய் மெய் காதல் - பாகம்-1

          பொய்  மெய் காதல்

     கண்ணீரில் நீந்தும் மீன்களாய், கருவிழி முழுதும் எதிர் பிம்பம் தேங்க, கண்விழியோரம் கசிந்த நீரை துடைத்தெழுந்தாள் கயல்விழி, ஆம் கதையின் நாயகி தான். “ஆறுதல் சொல்ல அன்னை இல்லையே” என்பவர்களுக்கெல்லாம், “தாயுமனவராய் என் தந்தை இருக்கிறார்” என சிவமணி-யை சுட்டிக்காட்டி சொல்வாள், சற்று சூடாகவே. இதற்காகவே, பள்ளி முதல் கல்லூரி வரை தனக்காக அனுதாபப்படும் அத்துணை தோழிகளையும் இழந்தால்.

“தெரியாமல் சொன்ன வார்த்தைக்கு தோழியை முறைத்து விட்டோமே” என எண்ணி, கைபேசியை நாடிச்சென்று, பெயர் பட்டியலில் “Aruna” என பெயர் வர, வேகமாய் button-ஐ அழுத்தி காதில் வைத்தால்.
கயல்விழி : “ஹலோ அருணா.?”

“அருண் இல்லங்க. வெளில போயிருக்கான், நீங்க?” (ஒரு ஆணின் குரல்)

கயல்விழி : அருண் இல்ல, அருணா என்னோட friend, அவ போன் இல்லையா இது?

“இல்ல இது என் போன் தான், அருணா-னு எனக்கு யாரையும் தெரியாது., நம்பர் ,மாத்தி போற்றுபிங்க சரியா பாருங்க..”

கயல்விழி : “இல்லைங்க அவ நம்பர்-க்கு நான் நிறைய தடவ பேசிறிகேன், அவ CallerTune கூட Mr.Romeo-ல மெல்லிசையே பாட்டு-ல ‘பூவில் நாவிருந்தால், காற்றும் வாய் திறந்தால்’-னு வரும், ஆனா இன்னைக்கு ரிங் போகல, பாட்டும் கேக்கல, கால் பன்னொன நீங்க தான் எடுத்திங்க, நம்பரும் கரெக்ட் தான் அதான் எனக்கு ஒன்னும் புரியல. சரி ஓகே sorry-ங்க தெரியாம பண்ணிட்டேன்” என பட்டாசாய் வெடித்தாள்.

“என்னோட நம்பர் 95000XXXXX, ஒருவேள cross-talk-ஆ இருக்கலாம்., உங்க மேல தப்பில்ல, ஆனா நீங்க சொன்ன பாட்டு Mr.Romeo இல்ல love Birds”.

கயல்விழி : “எல்லாம் எனக்கு தெரியும், வந்துட்டாங்க....” – னு phone-அ கோவமா வச்சுட்டேன்.

சில நிமிடங்கள் கழித்து, சில மைல் தூரம் கடந்து. மறுமுனையை சற்று எட்டிப்பார்த்தால்.

1 New Message, Received (Unknown)      

                                 (காதல் வளரும்...)